உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கி வருகிற 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். இந்நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செட்டியார் 19ல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 கூடாரங்கள், அதில் தங்கி இருந்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடமைகள் எரிந்து நாசமானது. ஆனால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.