
பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் நிலையில் மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்கள்.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி கடந்த வருடம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல மாநில முதல்வர்கள் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து நிதி ஆயோக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி, முதலமைச்சர். மு க ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உரையாடினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.