சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் வந்த விமானம், ஜோத்பூரில் இருந்து 124 பயணிகளுடன் வந்த விமானம் என மொத்தம் 5 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரம் வட்டமடித்தது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 5 விமானங்களும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதே போல் பிற நகரங்களுக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…
Read moreஊதுபத்தியை மறந்து உள்ளேயே வச்சிட்டேன்…!! பட்டாசு போடும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த சேட்டை… குடும்பத்தினர் ஷாக்…!!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை…
Read more