அதிமுக சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த போது 66 எம்எல்ஏக்களோடு வந்தார்கள். அப்போது ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஆறு மாத காலத்திற்குள் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பல்வேறு வழக்குகள் எல்லாம் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை நடைபெற்ற போது ஓபிஎஸ்-சுக்கு  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கொடுக்க கூடாது. அந்த இடத்திற்கு ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தார்.

சபாநாயகர் பேசும்போது,  எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பு மட்டும்தான் சட்டசபை விதிகளில் இருக்கின்றது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்ற விதிகளில் கிடையாது.  அவருக்கு முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் முன்வரிசையில் எடப்பாடி பக்கத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரை ? எங்கே அமர வைக்க வேண்டும் என்பது சபாநாயகருடைய  உரிமை. இது ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் தனபால் அவர்கள் சபாநாயகராக இருக்கும்போது கூட இதே விதியை தான் நீங்கள் பின்பற்றினீர்கள். அப்போது  கலைஞர் கருணாநிதிக்கு நாங்கள் சீட்டு கேட்கும் போது நீங்க மறுத்து விட்டீர்கள்.

அப்போதைய திமுக கொரடா சக்கரபாணி வைத்த கோரிக்கையை அப்போதைய சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.அதே போல சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் 66 பேர் இருக்கிறார்கள் என போர்டுல வச்சிருக்காங்க. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, நீங்கள் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திய லிங்கம் ஆகிய மூவரை ADMKவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.  அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை அதிமுக பட்டியலில் வைக்கக்கூடாது என்ற கோரிக்கை வைத்தார்.

இதற்கும் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுக்கு பழைய உதாரணத்தை சொன்ன சபாநாயகர், ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்த்து வாக்களித்த போது கூட அப்போதைய சபாநாயகர் தனபால் அவர்களை தகுதி நீக்கம் செய்யாமல் வைத்திருந்தார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும் என சொன்னார். இந்த நிலையில் தான் இந்த காரசார விதத்திற்கு மத்தியில் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியை துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் வெளிநடப்பு செய்துள்ளனர்.