அதானி குழுமத்திற்குட்பட்ட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அகமதாபாத் விமான நிலையத்தில் தரை கையாளுதல் பணிகளை மேற்கொண்டு வந்த துருக்கிய நிறுவனமான Celebi Airport Services India Ltd-யுடன் இருந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த முடிவுக்கு காரணம், இந்திய அரசின் உத்தரவின் பேரில் கவுதம் அதானி இந்த முடிவை எடுத்துள்ளார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம், செலிபி விமான நிலைய சேவைகள் இந்தியா லிமிடெட்டின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்திருந்தது. இதற்குப் பிறகு, செலிபி தனது அனைத்து வேலைகளையும் அதானியிடம் ஒப்படைக்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, செலிபி அதன் பணிகளை அதானி குழுமத்திற்கு ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீனாவும் அதேபோன்று தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. விமான நிலைய ஓய்வறை மற்றும் பயண சேவைகளை வழங்கும் சீன நிறுவனம் டிராகன்பாஸ் உடனான ஒப்பந்தத்தையும் அதானி குழுமம் முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதானி நிர்வகிக்கும் இந்தியாவின் விமான நிலையங்களில் டிராகன்பாஸ் சேவைகளை இப்போது பயணிகள் பயன்படுத்த முடியாது. இது சீனாவிற்கு எதிரான முக்கியமான வர்த்தக நடவடிக்கையாகவும், தேசிய பாதுகாப்பு பார்வையில் எடுத்த திட்டமிட்ட முடிவாகவும் கருதப்படுகிறது.

இதற்கிடையில், துருக்கிய நிறுவனமான Celebi, இது துருக்கிய நிறுவனமே இல்லையென விளக்கம் அளித்துள்ளது. “நாங்கள் துருக்கிய அரசுடனோ அரசியல் அமைப்புகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லாத தனியார் நிறுவனம். நாங்கள் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நிர்வகிக்கப்படுகிறோம். அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுடனும் செயல்படுகின்றோம்” எனக் கூறியுள்ளது. இருப்பினும், இந்திய அரசின் நடவடிக்கை தொடரும் வாய்ப்புகள் இருப்பதால், இதனை அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பது எதிர்பார்க்கப்படுகிறது.