
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக சமந்தா கலக்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமந்தா ஆக்சன் நாயகியாக நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடரின் டிரைலர் வெளியாகி அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் பங்காரம் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தாவின் பத்தாம் வகுப்பு மார்க் சீட் என இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை இல்லை என்றும் கூறி வருகின்றனர்.