
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் கனிகா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடிகை கனிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரீயலை திருச்செல்வம் இயக்குகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை கனிகாவுக்கு திடீரென காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகை கனிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த புதிய பூட்சுடன் நடக்க பழகிக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை கனிகாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram