
பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் டோனி ராபர்ட் வயது மூப்பு தொடர்பான உடல் பிரச்சனை காரணமாக மரணம் அடைந்துள்ளார். இதனை அவரது மகள் தெரிவித்துள்ளார்.
பிளே இட் அகைன், சாம், ரேடியோ டேஸ், ஸ்டார் டட்ஸ் மெமரி, ஹன்னா அண்ட் ஹேர் சிஸ்டர்ஸ், தி கேர்ள்ஸ் இன் தி ஆஃபீஸ், கீ எக்சேஞ்ச், டர்ட்டி டான்சிங், மை பெஸ்ட் பிரெண்ட்ஸ் ஓய்ப் உள்ளிட்ட பிரபலமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாது இவர் ஒரு பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பிற்கு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.