தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கடந்த 1970 முதல் 2010-ம் ஆண்டு வரை உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விஜயகாந்த் ஜொலித்தார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார். விஜயகாந்தின் தற்போதைய நிலைமையை பார்த்து கண்கலங்காத நபர்களே  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்ட தியாகராஜன் நடிகர் விஜயகாந்த் குறித்து ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.

நடிகர் தியாகராஜன் பிரபல நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார். இந்நிலையில் நடிகர் தியாகராஜன் பேட்டியில் பேசியதாவது, 1984-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் 18 படங்கள் ரிலீஸ் ஆனது. ஒரு நடிகருக்கு தமிழ் சினிமாவில் இத்தனை படங்கள் வெளியாவது என்பது மிகப்பெரிய விஷயம். அவரைப் போன்ற ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. அப்போது காலை 6 மணிக்கு எல்லாம் நடிகர் விஜயகாந்த் சூட்டிங் வந்து விடுவார். அப்போது அவர் சாப்பிடுவாரா அல்லது தூங்குவாரா என்பது கூட தெரியாது என உருக்கமாக பேசியுள்ளார். மேலும் நடிகர் தியாகராஜனின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.