
நடிகர் ஜெய் நடிப்பில் பேபி அண்ட் பேபி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு, ஆனந்தராஜ், கிங்ஸ்டன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி போன்ற பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் டி இமான்.
இந்த படத்தின் டீசர் காதல் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.