
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வாத்தி திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் காரணமாக மதுரையில் தங்கியுள்ள நடிகர் தனுஷ் தனியாக ரோட்டில் ஜாக்கிங் சென்றுள்ளார். இதை அங்கிருந்த ரசிகர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் நடிகர் தனுஷ் மதுரையில் ஜாக்கிங் செல்லும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Dhanush spotted today while jogging ??#CaptainMiller shooting currently going in Madurai ?pic.twitter.com/K9O4M6KnW6
— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2023