இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் “ஓஹோ எந்தன் பேபி” என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கார் நடித்துள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ப்ரோமோஷன் விழாவில் பேசிய விஷ்ணு விஷால், தன் தம்பியின் படத்தை அமீர்கான் பார்த்து கண்கலங்கியதாக கூறினார். மேலும் தன்னுடைய தயாரிப்பில் ராட்சசன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.