சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்தியா சிறப்பாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் இந்திய அணி பேட்டிங்கில் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய சுப்மன் மில் 8 ரன்களில் டக்  அவுட் ஆகி ஆகினார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மற்றும் ஜெயஸ்வால் ஜோடி சேர்ந்தனர்.

இவர்கள் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்ட  நிலையில் ரிஷப் 39 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆகினார். இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்த நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அஸ்வின் 102 ரன்கள் எடுத்து சதம் விளாசிய நிலையில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்துள்ளார். இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத 4 விக்கெட் வரை வீழ்த்தினார். மேலும் நாளை இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.