வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் பான் எண்ணை, ஆதார் கார்டுடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி மார்ச் 31 ஆகும். தற்போது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது குறித்து தெரிந்துகொள்வோம். முதலில் (https://www.incometaxindiaefiling.gov.in/) என்ற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் குயிக் லிங்க் பிரிவின் கீழ் “லிங்க்ஆதார்” எனும் பட்டனை கிளிக் செய்யவும். உங்களது ஆதார் கார்டில் குறிப்பிட்டுள்ள படி பான், ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு புது பக்கம் திறக்கும். அவற்றில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லிங்க் ஆதார் எனும் ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும்.

ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது?

# வருமான வரியை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கு incometax.gov.in பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

# லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேடவும்.

# பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

# பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் உங்களது திரையில் ஒரு செய்தி தோன்றும்.

# தற்போது பான்கார்டின் 10 இலக்கங்கள், 12 இலக்க ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படும்.