இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம், சீனியர் சிட்டிசன்கள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற திட்டங்களுக்கு இனி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இனி தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.