செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மிகப்பெரிய இன அழிப்பை செய்து வருகிறார்கள். 1950களில் உலக வரைபடத்தை பார்த்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லை. ஆனால் அவர்கள் இன்றைக்கு ஆக்கிரமிக்கிற நோக்கத்தோடு, அரபுக்களுடைய இடத்தை கைப்பற்றி கொண்டு,  அந்த இடத்தில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றியது மட்டும் அல்ல, இன்று கொன்று குவிக்க கூடிய ஒரு அப்பட்டமான இன அழிப்பை செய்கிறார்கள்.

அதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பாலஸ்தீனத்திலும்,  இஸ்ரேலிலும் கொல்லப்படுகிற மக்கள்,  துன்பப்படுகிற மக்கள் எல்லோருக்குமான நம்முடைய துயரத்தையும்,  துக்கத்தையும் நாம் தெரிவித்து கொள்கிறோம். இஸ்ரேல் உடனடியாக குண்டு வீசுகிற தன்மையை நிறுத்தி கொள்ள வேண்டும்.   குண்டு வீசுவது என்பது எப்படி என்றால் ? அவர்களை பயமுறுத்துகின்றதுக்காக அல்ல….  முற்றிலுமாக அந்த மக்களையே அழித்து விடுவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்கிறார்கள்.

இதுவரை 1500 ஹமாஸ் போர் வீரர்களுடைய உடல்கள் கண்டுபிடிக்கபட்டு இருக்கின்றன. மொத்தமே அவர்களுடைய எண்ணிக்கை 3000 என்று சொல்லுகிறார்கள். அதில் 1500 பேரை கொன்று குவித்துவிட்டால் ? அந்த இடம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். உலக நாடுகள் இதை வன்மையாக கண்டிக்கவேண்டும்.   பாலஸ்தீனியர்களுடைய சொந்த மண் அது. அந்த மண்ணை அபகரிப்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது. தமிழக காங்கிரஸ் தன்னுடைய வன்மையாக கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என தெரிவித்தார்.