
இணையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதில் மிகுந்த மோசடியும் இருக்கக்கூடும் என்பதை ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷுப ஜேனா அனுபவித்த துயரம் நிரூபிக்கிறது. மே 8 அன்று, அவர் ஒரு ஆன்லைன் தளத்தில் தனது பழைய சோபாவை ரூ.10,000க்கு விற்பனை செய்யும் வகையில் விளம்பரம் செய்தார்.
விரைவில் அவரை தொடர்பு கொண்ட ராகேஷ் குமார் சர்மா என்ற நபர், தன்னை ஒரு பர்னீச்சர் வியாபாரி என கூறி விலையை ₹8,000 என முடிவுசெய்தார். பணம் பரிமாற்றம் செய்வதற்காக அந்த நபர், ஷுப ஜேனாவிடம் அவரது வங்கி விவரங்களை கேட்டார். ஆரம்பத்தில் பரிவர்த்தனை தோல்வியடைந்ததாக கூறி, உங்கள் அம்மாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புகிறேன் என்று கூறி ஷுப ஜெனாவிடம் அவரது அம்மாவின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டார்.
அதனை நம்பிய ஷுப ஜேனா தனது தாயாரின் வங்கி விவரங்களையும் பகிர்ந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நபர் இருவரின் வங்கி கணக்குகளிலிருந்தும் பணத்தை திருடத் தொடங்கினார். மே 10-ஆம் தேதி, மோசடியாளன், “தவறுதலாக ₹5.22 லட்சம் பிடிக்கப்பட்டுவிட்டது, அதை திருப்பி அனுப்புகிறேன்” என கூறியபோதும், பிறகு அவரது மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பதற்றத்தில் வங்கிக்குச் சென்ற ஷுப்ரா மற்றும் அவரது தாயார், மொத்தமாக ₹5,21,519 கணக்கிலிருந்து பறிபோனதை உணர்ந்தனர். உடனடியாக, இருவரும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.