
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோரா கல்யாண்பூர் பகுதியில் நேற்று நடந்த சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மினி வாகனம் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு பெண் பயணி சைகை காட்டியதையடுத்து ஓட்டுநர் வாகனத்தை முறையாக ஓரமாக நிறுத்தாமல் திடீரென இடையே நின்றார்.
அந்த நேரத்தில் பின்னால் வந்த DCM லாரி, திடீரென நிறுத்தப்பட்ட மினி வாகனத்தை நேரடியாக மோதியது. அதனால் மினி வாகனம் வேகமாக தள்ளப்பட்டு எதிரே வந்த பைக்குடன் மோதியது. அந்த மோதலில் பைக் ஓட்டுநர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
उत्तर प्रदेश के जिला पीलीभीत का ये हादसा देखिए, मैजिक चालक की लापरवाही सवारियों की जान पर बन आई @NavbharatTimes pic.twitter.com/vw9VOHMkPd
— NBT Uttar Pradesh (@UPNBT) May 25, 2025
அந்த விபத்துக்குப் பிறகு DCM ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். அவரை தடுக்க பொதுமக்கள் முயன்றபோதும் அவர் தப்பியோடியதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர், மக்கள் ஜிரௌனியா காவல் நிலையத்திற்கு தகவல் வழங்க, போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் DCM ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தின் முழு காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதால், மினி வாகனத்தின் ஓட்டுநரின் அலட்சியமும், விபத்துக்கான காரணமும் தெளிவாக தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.