செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடிக்கு இங்க என்ன வேலை ?  மோடி வராமல் ஒருவேளை ராகுல் காந்தி வந்து நின்னாலும் ராகுல் காந்திக்கு எதிர்த்து போட்டியிடுவேன். என் ஸ்டேட்டில் உனக்கு என்ன வேலை ? இவ்வளவு பெரிய நாட்டை கொடுத்து பிச்சைக்கார நாடா மாத்திபுட்டு, என் ஸ்டேட் விட்டு போயிருப்பா…  இங்க என்ன வேலை ? வாரணாசியில போய் நிக்க வேண்டியது தானே…..  அப்படின்னாரு இதெல்லாம் என்ன கொடுமையா இருக்கு…

தம்பி கர்நாடகாவில வேலை செஞ்சாரு. அங்க போய் பிஜேபி மாநில தலைவரா இருக்க வேண்டியதுதானே? காவல்துறை அதிகாரியா இருக்கும்போது கர்நாடகாவில் சிங்கமா இருந்துட்டு இங்க வந்து அசிங்கமா பண்ணிட்டு இருக்காரு. அவருக்கு என்ன வாய் இருக்குன்னு பேசுறாங்க. நீங்க எல்லாம் எது இருக்குன்னு பேசுவீங்க…. இல்லை எதால பேசுவீங்க.. இதெல்லாம் ஒரு பேச்சா ?

திமுக சொத்து பட்டியலை நீங்க வெளியிட்டிங்க வரவேற்கிறேன். ஊழல் பட்டியல வெளியிட்டிங்க வரவேற்கிறேன். அதிமுக ஊழல் பட்டியல,  சொத்து பட்டியல வெளியிடுங்க? அப்ப கூட்டணி வைப்பீங்கனா… மறைத்து விடுவீங்க… அப்ப என்ன உங்க கிட்ட நேர்மை இருக்கு ? நான் ஊழலை எதிர்த்து போராடவில்லையா? பேசலையா ?

ஒட்டுமொத்தமா எல்லா தொகுதியிலும் உங்க எல்லாரையும் எதிர்த்து தானே நான் போட்டியிடுறேன். அப்போ ஊழல் எதிர்க்கிறேன், லஞ்சத்தை எதிர்க்கிறேன், எல்லாத்தையும் தான் எதிர்க்கிறேன். அப்படித்தானே நீங்க பாக்கணும். அத விட்டுபுட்டு அவங்கள எதிர்த்து போராட வேண்டியதுதானே.. ஏதோ அறிவுபூர்வமான கேள்வியை கேட்ட மாதிரி என அண்ணாமலையை விமர்சித்தார்.