
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு அவருடைய முதல் மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இவருக்கு நேற்று முடி சூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 70 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் முடி சுட்டு விழா என்பதால் இங்கிலாந்து நாடே விழாக்கோலம் பூண்டது. மன்னர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு முடி சூட்டு விழா நடைபெற்ற நிலையில் முடிசெட்டு விழாவின்போது மர்ம உருவம் ஒன்று கையில் அரிவாள் போன்ற ஒன்றை ஏந்தி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் மன்னர் சார்லஸின் முடி சூட்டு விழாவில் பேய் ஒன்று கலந்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் சிலர் தேவாலயத்தை சேர்ந்த குருக்களில் ஒருவராக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த மர்ம நபர் நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Anyone else just notice the Grim Reaper at Westminster Abbey? 👀#Coronation pic.twitter.com/77s4XIY17i
— Joe (@realjoegreeeen) May 6, 2023