ஆந்திர மாநிலத்தில் உள்ள பல் நாடு மாவட்டத்தில் நரசராவுப்பேட்டையில் செயல்பட்டு வரும் பாவனா இளநிலை கல்லூரியில் அனுஷா என்பவர் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதியில் உள்ள சக தோழிகளிடம் பேனா குறித்து சண்டை போட்டுள்ளதாகவும். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அனுஷா விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

கீழே விழுந்த அனுஷாவை கல்லூரியில் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்ற அனுஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நண்பர்களுடன் சண்டையிட்டதால் தற்கொலை செய்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.