உத்திரபிரதேச மாநிலத்தில் லிசாரி கேட் பகுதியில் வசித்து வந்த மொயீன் மற்றும் மனைவி, 3 குழந்தைகளை சொத்து பிரச்சனையில் கொடூரமாக கொலை செய்த ஜமீல் ஹுசைன் என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் தரப்பில் ஜமீல் ஹுசைன் டெல்லி மற்றும் தானேவில் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி எனவும், இந்த கொலை வழக்கில் தேடப்படும் ஜமீல் ஹுசைன் குறித்த தகவல்கள் தெரிந்தால் அதனை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் 50,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ஜமீன் ஹுசைன் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி ஜமில் ஹுசைன் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை காவல்துறையினர் மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவரை நெருங்கிய போது ஜமில் ஹுசைனுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஜமீன் ஹுசைன் காவல்துறை யினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுண்டர் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, சொத்து விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபரை கொலை செய்த  ஜமீல் ஹுசைன் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.