ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கிழ்பவானி வாய்க்காலில் ஆங்காங்கே கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் உக்கரம் மில்ரோடு, வண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பேனரில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்தப்பட்டால் வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என எழுதப்பட்டுள்ளது.