திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது. இதனையடுத்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் மழை காரணமாக பல்வேறு மரக்கிளைகள் முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வயர்களை சீரமைத்த பிறகு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.