
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷர்மிளா (52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. இந்நிலையில் இவர் கடந்த 2ம் தேதி அன்று விசாகப்பட்டினம் ஆர் கே கடற்கரையிலிருந்து, காக்கிநாடா பகுதியில் உள்ள கடற்கரை வரை 150 கி.மீ தூரம் வரை கடலில் நீந்தி கடந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஏற்கனவே ராமசேது இலங்கை லட்சத்தீவு உள்ளிட்ட கடலில் நீந்தி இருக்கிறேன். கடலில் நீந்தி செல்லும் போது ஜல்லி மீன்கள் இருக்கும். அந்த மீன்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும், ராம் பள்ளியிலிருந்து ஆமைகள் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் கூறினார். அரிய வகை கடலில் வாழும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் நீந்தியதாக தெரிவித்தார்.