
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை கைதியான காசி கடந்த 2022-ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற கைதியுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தப்பி ஓடிய இரூவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக தேடிவந்த காசி தலைமறைவாக இருந்த நிலையில் முத்துக்குமார் பெங்களுரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பெயரில் போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை கைது செய்தனர்.