தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கருப்பு நிறத்தில் அரைகுறையான உடையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு கருப்பு தினமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரின் காதலும் முறிந்தது.
ஆனால் இருவர் தரப்பிலிருந்தும் எந்த ஒரு விளக்கமும் வராத நிலையில், அனிருத் ஒரு பேட்டியில் வயது வித்தியாசம் காரணமாக காதல் முறிந்ததாக கூறியிருந்தார். அனிருத்தை விட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். மேலும் நடிகை ஆண்ட்ரியா தான் திருமணமான ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அந்த உறவில் இருந்த போது நான் பெரும் பதற்றமாக இருந்ததால் ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து சரியானேன் எனவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram