ராஜஸ்தான் மாநில அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட் எல்பிஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படும் என  அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

டிசம்பர் 2022 இல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் அறிவித்திருந்தார். இதற்காக தற்போது ரூ.1,500 கோடி செலவிடப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.