
தல அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் அஜித் நடிக்க தயாராகி உள்ளார். இது அஜித்துக்கு 62-வது படம் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்பின் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராயிடம் படக் குழுவினர் பேசி வருவதாக இந்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 62-வது திரைப்படத்தில் 2 நாயகிகள் உள்ளதாகவும், மற்றொரு ஹீரோயினியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் படக் குழுவினர் பேசி வருவதாகவும் புது தகவல் வெளியாகி இருக்கிறது.