தமிழ்நாட்டில் நாதஸ்வரக் கலையில் சிறந்து விளங்கும் 40-க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களைப் பாராட்டி விருது வழங்குவதற்காக நான் மும்பைக்குப் பயணம் மேற்கொண்டேன். அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதிக்குச் சென்று, அரசியலமைப்புச் சட்டத் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

இதனைத் தொடர்ந்து, தாதர் பகுதியில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவிடத்திற்கும் நேரில் சென்று எனது அஞ்சலியைச் செலுத்தினேன்.

அங்குள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. “கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!!” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தச் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

“>

 

கலையை வளர்க்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு, சமூகத் தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தியது மனநிறைவைத் தந்துள்ளது.