சென்னை புழல் மத்திய சிறைக்கு முதல்வர் விஜய் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சிறைக்குள் கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்துக் விசாரித்த அவர், உடனடியாக அருகில் உள்ள புழல் காவல் நிலையத்திற்கும் நேரில் சென்றார்.
அங்கு டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் சூழ, தினசரி வழக்குப் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் லாக்-அப் வசதிகளை அவர் தீவிரமாக ஆய்வு செய்தார். இந்த அதிரடி திடீர் விசிட்டுகளுக்குப் பின்னால் அரசியல் காரணங்களைத் தாண்டி, ஒரு ஜோதிடப் பரிகார ரகசியம் இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
அதாவது, தற்போதைய கிரக நிலைகளின்படி முதல்வருக்குச் கடுமையான சோதனைக் காலம் நிலவுவதாகவும், சட்டப் போராட்டங்கள், தேவையற்ற சர்ச்சைகள் அல்லது காவல் நிலையப் பயணம் போன்ற கடுமையான காலங்கள் வரக்கூடும் என்றும் ஜோதிடர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜாதகத்தில் ஏற்படும் தீய கிரகப் பார்வைகளை முன்கூட்டியே திசைதிருப்பவும், எதிர்மறை ஆற்றல்களைத் தடுத்து நிறுத்தவும் காவல் நிலையம் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று வருவது ஒரு பாரம்பரிய பரிகார முறையாகச் சொல்லப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் சட்டச் சிக்கல்களில் சிக்குவதற்கு முன்பாக, தாமாகவே முன்வந்து காவல் நிலையத்திற்குள் காலடி எடுத்து வைப்பது தோஷங்களை நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த விசிட் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புழல் சிறையில் முதல்வர் விஜயின் திடீர் விசிட் ஏன்?.. பயபரபரப்பு தகவல்
சென்னை புறநகரில் அமைந்துள்ள நாட்டின் முக்கிய சிறை வளாகங்களில் ஒன்றான புழல் மத்திய சிறைக்கு முதல்வர் விஜய் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கைதிகளிடம் நேரடியாகப் பேசிய முதல்வர், அவர்களின்… pic.twitter.com/uUwp4710La
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 31, 2026
“>
ஜென்ம லக்னத்தின் மீதான கிரகங்களின் தாக்கம் மற்றும் சட்டச் சிக்கல்களைக் குறிக்கும் பாதங்களின் பலம் காரணமாக, அரசியல் களத்தில் எழக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க இந்த ஆன்மிக வழிமுறை கையாளப்பட்டதா என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.
