மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக, அவரது எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் மெரினா கடலில் ‘பேனா சிலை’ அமைக்க வேண்டும் எனப் பல்வேறு தமிழ் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று, சென்னை மெரினா கடல்பகுதியில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.
இருப்பினும், மாநிலத்தில் நிலவிய நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, “இந்த நேரத்தில் பேனா சிலை அமைப்பது அவசியமா?” என அன்றைய ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். மாநிலத்தின் பொருளாதாரச் சூழ்நிலை சரியில்லாத நிலையில், மக்களின் வரிப்பணத்தைப் பேனா சிலைக்காகச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் பொருளாதாரம் சீரடைந்த பிறகு பேனா சிலை அமைப்பது குறித்து யோசிக்கலாம் எனக் கூறி, கடலில் பேனா சிலை அமைக்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டதாக எ.வ.வேலு தெரிவித்தார். தலைவரின் நினைவை விட மாநிலத்தின் பொருளாதார நலனும் மக்கள் நலனுமே முக்கியம் என அவர் எடுத்த இந்த முடிவு குறித்து எ.வ.வேலு சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார்.
இதனிடையே, கடலில் பேனா சிலை அமைப்பது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் எழுப்பிய கேள்விக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எ.வ.வேலு சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துப் பதிலளித்தார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த முடிவால், மெரினா கடலில் பேனா சிலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
