பெற்ற மகனைக் கறிக்காகக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடிய தாயின் கொடூரம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாப்பாட்டுக்குக் கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், பெற்ற தாய் தன் சொந்த மகனையே அடித்துக் கொன்றுவிட்டு, “பையன் எழுந்திரிக்கவே மாட்டேங்குறான், உடம்பெல்லாம் ஜில்லுனு குளிர்ந்து போயிருக்கு” என்று உறவினர்களிடம் கூறிப் பொய்யான நாடகத்தைச் அரங்கேற்றியுள்ளார். பெற்ற தாயே தன் மகனைக் கொன்ற இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உறைய வைத்துள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் கறி சமைப்பது தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தாய், சற்றும் யோசிக்காமல் தன் மகனை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தான் செய்த கொடூரத்தை மறைப்பதற்காக, மகன் ஏதோ இயற்கையாக இறந்துவிட்டது போலக் காட்ட முயன்ற அந்தத் தாய், அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் அழுது புலம்பி நாடகமாடியுள்ளார்.

இருப்பினும், அந்த இளைஞனின் சகோதரனுக்குத் தாயின் நடவடிக்கைகளில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. தம்பியின் உடலிலிருந்த காயங்களையும், தாயின் பதற்றமான போக்கையும் கவனித்த சகோதரன், உடனடியாக இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தியதில், அந்தத் தாயின் பொய் நாடகம் அம்பலமானது. கறிக்காகப் பெற்ற மகனையே கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய அந்தத் தாயைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.