மகளிர் டெல்லி பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், மேதாவி பிதுரி என்ற 20 வயது இளம் வீராங்கனை தனது வித்தியாசமான ‘6-7’ ஜென் Z கொண்டாட்டத்தால் ஒரே இரவில் இணையத்தில் வைரலானார். சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியபோது அவர் செய்த இந்தக் கொண்டாட்டம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தக் கொண்டாட்டத்திற்கான யோசனை தனது தங்கையிடமிருந்து வந்ததாக மேதாவி பிதுரி பின்னர் தெரிவித்தார். தங்கை அளித்த ஆலோசனையின்படியே 67 ஆம் எண் ஜெர்சியை அணிந்து, இந்த “6-7” பாணி கொண்டாட்டத்தைச் செய்துள்ளார். இதுவே அவரை இந்த மகளிர் DPL சீசனில் மிகவும் வைரலான வீராங்கனைகளில் ஒருவராக மாற்றியது.

வெறும் வைரல் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், மேதாவி பிதுரி தனது சிறந்த பந்துவீச்சினாலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிக்கு எதிரான திங்கள்கிழமை போட்டியில், அவர் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது அணி 68 ரன்களை வெற்றிகரமாகத் தற்காத்துக்கொள்ள உதவினார்.

தற்போது வரை மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த மகளிர் DPL தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் மேதாவி பிதுரி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இணையத்தில் மட்டுமல்லாமல், மைதானத்திலும் தனது திறமையை நிருபித்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

Takes a wicket ➡️ Hits the 6-7 celebration🤙🏏😭

Catch all the Women’s Delhi Premier League 2026 action LIVE on FanCode 📲 #WomensDPL #DelhiPremierLeague #DPLSeason3 #MedhaviBidhuri #WomensCricket pic.twitter.com/6Bi00YIvyv

— FanCode (@FanCode) August 22, 2026

“>

இவரது இந்த வைரல் கொண்டாட்டம் எந்த அளவுக்குப் பிரபலமடைந்தது என்றால், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கூட இங்கிலாந்தில் நடந்த கவுண்டி போட்டியில் இதைப் போலச் செய்து காட்டியிருந்தார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மேதாவி பிதுரி, இத்தொடரில் அனைவராலும் கவனிக்கப்படும் வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.