மகாராஷ்டிரா மாநிலம் சும்பாஜிநகர் பகுதியில் உள்ள தீஸ்கான் கிராமத்தில், 19 வயது வாலிபர் குடும்ப தகராறு காரணமாக அருகில் இருந்த மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், அவரை கீழே இறங்குமாறு கதறி அழுது கெஞ்சியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அந்த வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி சமாதானம் செய்ய முயன்றும், அவர் யாருடைய பேச்சையும் கேட்காமல் மலையின் விளிம்பிலேயே நின்றுகொண்டிருந்தார்.
நிலைமை ஆபத்தானதை உணர்ந்த தந்தை, மகனை பத்திரமாக மீட்கும் பதற்றத்தில் மலையின் மேலே ஏறிச் சென்று அவரைப் பிடிக்க முயன்றார். அப்போது வாலிபர் கீழே குதிக்க, அவரைப் பிடிக்க முயன்ற தந்தையும் நிலைதடுமாறி இருவருமே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
In Sambhajinagar, Maharashtra, a 19-year-old boy climbed a hill due to a family dispute; villagers and his parents spent three hours trying to persuade him to come down. While his father was attempting to rescue him, both slipped and fell. Following this, his mother also jumped… pic.twitter.com/q7palrGoIK
— Sahil Patel (@SahilpatelCA) August 21, 2026
கண்முன்னே கணவனும் மகனும் கீழே விழுந்து உயிரிழந்ததைக் கண்ட தாய், தாங்க முடியாத அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோனார். அடுத்த சில நொடிகளிலேயே, மனவேதனை தாங்க முடியாமல் அவரும் அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
