தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விவாதங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் மற்றும் தனிப்பட்ட விவகாரங்களில் நண்பர்கள் தலையிடுவது குறித்து நெட்டிசன்கள் எழுப்பி வரும் கேள்விகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் விவகாரங்களில், தனது நீண்டகால நட்பைக் காரணம் காட்டி (நண்பேன்டா) நடிகை ஒருவருக்கு ஆதரவாக ஸ்ரீமன் குரல் கொடுத்து வருவதைத் த.வெ.க ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலராலும் விரும்பப்படாத இந்த விவகாரத்தில் நண்பர்கள் தொடர்ச்சியாகக் கருத்துத் தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் குழந்தைப் பருவ நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் பலரும் அவருடன் பல வருடங்களாகப் பயணம் செய்திருந்தாலும், அவர்களுக்கு அளிக்கப்படும் இடத்தைக் காட்டிலும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது ஏன் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது.

பெற்றோருக்கே தெரியாத பல தனிப்பட்ட விஷயங்கள் ஒருவருக்கு இருக்கக்கூடும் நிலையில், வெறும் நண்பர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்தையும் அறிந்துகொண்டதாகக் கூறி நியாயம் கற்பிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விட்டுவிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

“>

 

அரசியல் களமும் தனிப்பட்ட நட்பும் ஒன்றையொன்று எப்படிப் பாதிக்கின்றன என்பது குறித்த இந்த விவாதம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.