உத்திரபிரேதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கடாம்பூர் எஸ்டிஎம்கே இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய காக்கிச் சீருடை, அதிகார வர்க்கத்தின் சுகபோக சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. வெளியான அந்த வைரல் காட்சியில், ஒரு ஹோம் கார்டு மற்றொரு சக ஹோம் கார்டின் கால்களுக்கு மசாஜ் செய்து விடுகிறார். சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் உறைந்து போயினர்.
அதாவது , கால்களை நீட்டி அமர்ந்து மசாஜ் வாங்கும் நபர் மனோஜ் குமார் என்றும், அவர் எஸ்டிஎம்கே டிரைவராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்குக் கால் அமுக்கி விடும் மற்றொரு நபரின் பெயர் ரஜத் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவல்கள் அனைத்தும் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
कानपुर में SDM के ड्राइवर ने वर्दीधारी होमगार्ड से पैर दबवाए!
वर्दी पहनी हुई है… फिर भी किसी की गुलामी?
यह तस्वीर योगीराज की असलियत बता रही है। @Uppolice
जांच हो या ना हो, लेकिन सिस्टम की बेइज्जती हो चुकी है।
#Kanpur #UPPolice #YogiSarkar pic.twitter.com/VspGMYvMVs— Afrin (@AfrinKh28922665) August 15, 2026
சமூக வலைதளங்களில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. “நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், சில இடங்களில் அதிகாரிகளின் அடிமைகளாகவே மனிதர்கள் தொடர்கிறார்கள்” என்று ஒரு பயனர் மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார். சீருடை அணிந்த ஒருவரை சக ஊழியரே இப்படி ஒரு நிலைக்குத் தள்ளியிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, கான்பூர் போலீசார் உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில்,
சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த வீடியோவை நாங்கள் தீவிரமாகக் கவனித்துள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள இருவரும் ஹோம் கார்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கான்பூர் நகர் மாவட்ட ஹோம் கார்டு கமாண்டன்ட் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் முடிவில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
