தஞ்சாவூரில் அதிமுக சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்ட மேடையில் நின்று உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் முதல்வர்கள் பலர் பணியாற்றிய அறைக்குப் பதிலாக, தற்போதைய முதல்வருக்குப் புதிய நவீன அறை தேவையா? அவர் நடிகர், அப்படித்தான் இருப்பார்” என காரசாரமாக விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மக்களும் விவசாயிகளும் முக்கியமில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகளை வஞ்சிக்காமல் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகள் மீது தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேடையில் வலியுறுத்தினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு மற்றும் தவெக அரசுக்கு எதிராக அவர் முன்வைத்த விமர்சனங்கள், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
