நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையே நிலவி வரும் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது ‘ஜோசப் விஜய்’ என்ற பெயர் விவகாரத்தில் சீமானை நடிகை விஜயலட்சுமி மிகக் காரசாரமாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் போஸ்டர் அல்லது டைட்டில் கார்டில் “ஜோசப் விஜய்” என்று ஏன் போட்டீர்கள் என சீமான் கேள்வி எழுப்பி, அது குறித்து விமர்சனம் செய்திருந்தார். சீமானின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், சீமானின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜோசப் விஜய் என்று சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம். அதுதானே முதலமைச்சரின் உண்மையான பெயர்!” என்று சீமானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
வா க்கா வா க்கா!!
விஜயலட்சுமி அக்கா IS BACK
நீ செத்தடா இனி @Seeman4TN pic.twitter.com/r2S0rlWr1m
— Senthil Nathan (@iamksnstr) August 13, 2026
மேலும் அந்த வீடியோவில் ஆவேசமாகப் பேசிய அவர், “விஜய் பேசினாலும் தப்பு, பேசலனாலும் தப்புன்னு சும்மா எதையாச்சும் சொல்லிட்டு இருக்கீங்க. இப்படி தேவையில்லாம சொல்லிட்டு இருக்கிறவங்கள பார்த்து கேக்குறேன்… பைத்தியங்களா நீங்க?” எனச் சீமானையும் அவரது ஆதரவாளர்களையும் சாடியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த அதிரடி வீடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
