ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது செய்த வித்தியாசமான கொண்டாட்டம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்த சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் சற்று நிதானமாக ஆட முயன்றாலும், தஸ்கின் அகமது வீசிய பந்தில் ரன் சேர்க்க திணறினார். போட்டியின் 22ஆவது ஓவரில், தஸ்கின் வீசிய லெந்த் பந்தை லெக் சைட் திசையில் அடிக்க முயன்றார் கிரீன்.
ஆனால், பந்தின் வேகம் மற்றும் திருப்பத்தை சரியாகக் கணிக்கத் தவறிய அவர், மட்டையின் நடுப்பகுதியில் பந்தைத் தவறவிட்டார். இதனால் பந்து நேராக மிட்-விகேட் திசையை நோக்கி உயáந்தபடி செல்ல, அங்கு நின்ற அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம் மிகச் எளிதாக அந்த கேட்சைப் பிடித்தார். இதன் மூலம் கேமரூன் கிரீன் 13 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
Taskin Ahmed with one of the all-time celebrations after nabbing Cam Green 😂 #PlayoftheDay | @nrmainsurance | #AUSvBAN pic.twitter.com/VF8dHRGJNB
— cricket.com.au (@cricketcomau) August 13, 2026
விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் சக வீரர்கள் முஷ்பிகுர் ரஹீமை நோக்கி ஓடிச் சென்று வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள, தஸ்கின் அகமது செய்த காரியம் தான் அனைவரையும் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியது. மைதானத்தில் தனது நாக்கை வெளியே நீட்டியவாறு அவர் செய்த வித்தியாசமான நடனக் கொண்டாட்டம் கேமராக்களில் துல்லியமாகப் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.
