90-களில் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் அப்பாஸ். அப்பாஸ், காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ஒரே படத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். இந்நிலையில், தனது மகள் எமிராவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பாஸ் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மகளின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அப்பாஸ், அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்த கருத்தும் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. தனது கமெண்டில் எமிராவை அன்புடன் வாழ்த்திய ஆர்த்தி ரவி, அவருக்கு எப்போதும் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாஸ் குடும்பத்துக்கும் ஆர்த்தி ரவி குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்பாஸின் மனைவி எரும் அலி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கணவர் நடித்த சில திரைப்படங்களுக்கும் அவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அப்பாஸ் – எரும் அலி தம்பதிக்கு எமிரா என்ற மகளும் அய்மான் என்ற மகனும் உள்ளனர். குடும்ப நட்பு காரணமாகவே ஆர்த்தி ரவி, அப்பாஸ் மகளுக்கு நெருக்கமாக வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக அப்பாஸின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளிலும் ஆர்த்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996-ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், விஐபி, பூவேலி, படையப்பா, சுயம்வரம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மகளின் பிறந்தநாள் பதிவு மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
