“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, அரசியல் களத்தில் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விவகாரம் தற்போது அனல் பறக்கும் விவாதப் பொருளாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் செய்யப்பட்ட நன்றிகள் மற்றும் துரோகங்கள் குறித்தும், தவெக தலைவர் விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தீயாய் பரவி வருகின்றன.
அரசியலில் மிகக் சாதாரண நிலையில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை உச்சத்திற்குக் கொண்டுவந்து முதலமைச்சர் நாற்காலியில் அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், காலப்போக்கில் அவருக்கு எதிராகச் செயல்பட்டது நன்றிகெட்ட தனமாக அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் மூத்த தலைவர் செங்கோட்டையன், தற்போதும் தனது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை உயிராக ஏந்தித் திரிவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
இதில் ஹைலைட்டாகக் கருதப்படுவது, மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தனது சட்டையின் பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொள்ளும் வாய்ப்பையும், அதற்கான அரசியல் வெளியையும் தவெக தலைவர் விஜய் வழங்கியுள்ளார் என்பதே பலரது பாராட்டுக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
இந்த இடத்துலதான் @TVKVijayHQ வானளவு உயர்ந்து நிற்கிறார்.
எங்கேயோ இருந்த ஓபிஎஸ் அவரை முதல்வராக்கி அழகுபார்த்த ஜெயலலிதாவுக்கு நன்றிகாட்ட மறந்தார்.
ஆனால் செங்கோட்டையன் எம்ஜியார் காலத்து அரசியல்வாதி ஆனாலும்… pic.twitter.com/0C11WXD2rB
— director esakki (@director_esakki) August 11, 2026
“>
அரசியல் கூட்டணிகள் மற்றும் கட்சித் தாவல்கள் அரங்கேறும் இந்தக் காலகட்டத்தில், நன்றியுணர்வை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் நிகழ்வுகள் தமிழகக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
