தன்னுடைய வாழ்க்கை நல்ல நிலையில்  சென்று கொண்டிருக்கும்போது திடீரென வேலை பறிபோனால், அடுத்து என்ன செய்வது என்ற கவலை பெரும்பாலானோருக்கும் ஏற்படும். குறிப்பாக 40 வயதில் வேலை இழப்பது என்பது குடும்பச் செலவுகள், கடன், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தும். ஆனால், சமூக வலைதளத்தில் செயல்பட்டு வரும் ஒருவர், தனது வேலையிழந்த அனுபவத்தை அனுபவத்தை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பகிர்ந்துள்ளார். 18 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய அவர், 40 வயதில் ஏற்பட்ட வேலையிழந்த அனுபவத்தை தனது வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

வேலை இழந்த பிறகு முதலில் தன்னுடைய வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியதாக அவர் கூறுகிறார். மாதந்தோறும் சம்பளம் வங்கிக் கணக்கில் வருவது நிறுத்தப்பட்டவுடன், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் உண்மையான முகம் தெரியவரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலை மற்றும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சில உறவுகள் நீடிப்பதை உணர முடியும் என்றும், வேலையிழந்த அனுபவத்தை என்பது வாழ்க்கையில் ஒரு ‘ரீசெட்’ பொத்தானை அழுத்துவது போன்ற அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Midlife Reboot (@midlifereboot43)

 

வேலை இருந்த காலத்தில் எப்போதும் தொடர்பில் இருந்தவர்கள், வேலை போன பிறகு எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். உண்மையான நண்பர்கள் வேலை இழந்த செய்தியை கேட்டு நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்கள்; ஒரு காபி அல்லது தேநீருக்கு அழைத்து பேசுவார்கள். ஆனால், வெறும் அலுவலகத் தொடர்புக்காக பழகியவர்கள் ஒரு ‘ஸாரி’ என்ற குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். இதன்மூலம், வாழ்க்கையில் யார் உண்மையாக நம்முடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது.

தற்போது அவரது இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. வேலை இழப்பை வெறும் பின்னடைவாக பார்க்காமல், வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பாகவும் பார்க்கலாம் என்ற அவரது அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 40 வயதில் ஏற்பட்ட வேலையிழந்த அனுபவத்தை தனது வாழ்க்கையை மாற்றியதுடன், மனிதர்கள், உறவுகள் மற்றும் எதிர்காலம் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், அவரது வீடியோவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.