உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் டியூஷன் மையம் ஒன்றில், பயின்று வந்த மாணவன் ஒருவன் தன் குடும்பத்துடன் அப்பகுதியைவிட்டு வேறு இடத்திற்கு மாறுவதையொட்டி, அவனுக்கு மறக்க முடியாத விடைபெறும் விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தின் ஆசிரியர் தனது இல்லத்திலேயே இந்தக் குட்டி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன் மூலம் மாணவர்களுக்கிடையேயான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த எளிய நிகழ்வு அமைந்தது.

இந்தச் சிறிய பார்ட்டிக்காக மாணவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து விதவிதமான தின்பண்டங்கள் மற்றும் சுவையான ஹோம்மேட் உணவுகளைத் தயாரித்து எடுத்து வந்திருந்தனர். அனைவரும் வட்டமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தனர். ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து அவர்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளனர் என்று உற்சாகமாகக் கேட்க, குழந்தைகளும் தங்களது பங்களிப்பைப் பெருமையுடன் வெளிப்படுத்தினர்.

 

View this post on Instagram

 

A post shared by ठा॰ वंशिका सिंह राणा (@ranajiunfiltered)

இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சிறிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடம்பரமில்லாத எளிய முறையில் நண்பனுக்கும் ஆசிரியருக்கும் மாணவர்கள் அளித்துள்ள இந்த விடைபெறும் பார்ட்டி, இணையவாசிகளின் முகத்தில் புன்னங்கைய வரவழைத்துள்ளதுடன், எதிர்காலத்தில் இந்தச் சிறுவர்களுக்கு இதுவே ஒரு இனிய நினைவாக மாறும் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.