நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ உதவி அல்லது அப்பாயிண்ட்மெண்ட் கோரி வந்த இளம் பெண் ஒருவரிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரே மிகவும் அநாகரிகமாகவும் அருவருப்பாகவும் நடந்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர வைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலக்கட்டத்தில், பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவலாளியே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by The Muslim Matter India (@themuslimmatter)

அந்தப் பெண் மருத்துவமனை தொடர்பான விவரங்களைக் கேட்ட நேரத்தில், அவரைத் தவறான பார்வையோடு கவனித்த அந்தச் செக்யூரிட்டி கார்டு, காகிதத்தைக் கொடுக்கும் சாக்கில் அவரது உடல் உறுப்புகளைத் தொட்டுத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். எதிர்பாராத இந்த விபரீத செயலால் அந்தப் பெண் ஆரம்பத்தில் நிலைகுலைந்து போயினும், உடனடியாக உஷாராகி இந்த முழுச் சம்பவத்தையும் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் இருவிதமான கருத்துகள் பரவி வருகின்றன. ஒரு தரப்பினர் அந்தச் செக்யூரிட்டி கார்டின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், மற்றொரு தரப்பினரோ அந்தப் பெண் முன்னதாகவே கேமராவை ஆன் செய்து திட்டமிட்டு இந்த வீடியோவை எடுத்திருக்கிறாரா அல்லது இது வெறும் விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டதா என்ற சந்தேகங்களை எழுப்பி விவாதித்து வருகின்றனர்.