குழந்தை பிறந்தது முதல் 18 வயது நிறைவடையும் வரை அவர்களை வளர்க்க எவ்வளவு செலவு ஆகும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், குழந்தையின் கல்வி, உணவு, மருத்துவ செலவுகள், உடை, அன்றாட தேவைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கணக்கிட்டு, குழந்தை வளர்ப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.1.39 கோடி வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு இணையத்தில் பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான அந்த வீடியோவில், குழந்தையை வளர்ப்பது என்பது வெறும் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுடன் முடிவடையாது என்றும், கல்வி, எதிர்கால தேவைகள், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் முன்கூட்டியே பொருளாதார திட்டமிடல் செய்வது அவசியம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vikhyat Singh (@vikhyat._)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் கூறியுள்ளதாவது, இவ்வளவு பெரிய தொகை என்பது குறிப்பிட்ட வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையை பொறுத்தே மாறுபடும் என்றும், அனைத்து குடும்பங்களுக்கும் ஒரே மாதிரியான செலவு இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். குழந்தையின் கல்வி மற்றும் வளர்ப்பு முறையை பொறுத்து செலவுகள் அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம் எனவும் கருத்துகள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில், பல சமூக வலைதள பயனர்கள் குழந்தையை வளர்ப்பது என்பது பணத்தால் மட்டும் கணக்கிட முடியாத ஒரு அனுபவம் என்றும் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் அன்பு, குழந்தைகளுடன் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் குடும்ப உறவுகளின் மதிப்பு ஆகியவை எந்த பொருளாதார கணக்கையும் தாண்டியவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய பொறுப்பு மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் உணர்வுபூர்வமான பயணம் என்றும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.