தலைநகர் டெல்லியில் உள்ள மைதானகரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், உணவுக்காகப் பணம் கேட்ட 60 வயது மூதாட்டியை அவரது சொந்த மகனே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்கக் கிராமத்தைச் சேர்ந்த கியூ., சிதா தேவி என்ற மூதாட்டி தனது மகனிடம் உணவு வாங்குவதற்காகச் சில சில்லறைப் பணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மது போதையிலும் வெறியிலும் இருந்த அவனது மகன் ஆமோத், தாயின் கோரிக்கையைக் கோபத்துடன் மறுத்துவிட்டு தகராாரில் ஈடுபட்டுள்ளான்.

வாய் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்தப் பாவி மகன், தன் பெற்ற தாயை எட்டி உதைத்துக் கொடூரமாகத் தாக்கியதுடன் விடாமல் அருகில் இருந்த சுத்தியை எடுத்துத் தலை மற்றும் பல இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிருக்குப் போராடிய நிலையில், வீட்டிலிருந்த மற்ற குடும்பத்தினரையும் அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்து மௌனமாக்கியுள்ளான். மேலும், கொலையை மறைக்கும் நோக்கத்துடன் மூதாட்டியின் சடலத்தை இரவோடு இரவாக வேறு எங்கேனும் தூக்கிச் சென்று வீசிவிடலாம் என்று அவன் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த மைதானகரி காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, ஆபத்தான நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்டுச் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கொடூரக் கொலையாளி ஆமோ்த்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.