சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனால் கழுத்தில் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய இளம்பெண் ஒருவர், தனது இறுதி மூச்சு பிரியும் தருணத்தில் காதலனின் பெயரைத் தொலைபேசியில் டைப் செய்து வைத்துவிட்டுக் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலித்த பெண்ணையே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் தப்பியோட நினைத்த கொடூரனின் முகத்திரையைக் கிழித்து, அந்தப் பெண் தனது மரணப் படுக்கையிலும் நீதி பெற்றுத் தந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழுத்தில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண், பேசுவதற்குக்கூட முடியாத நிலையில் தனது இறுதி நிமிடங்களில் காட்டிய மன தைரியம் அனைவரையும் உரைய வைத்துள்ளது. தான் இறந்துவிட்டால் குற்றம் செய்தவன் தப்பித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், தனது கைப்பேசியை எடுத்துத் தாக்குதல் நடத்திய காதலனின் பெயரைத் தட்டச்சு செய்து வைத்துள்ளார்.
அந்தப் பெண் உயிரிழந்த செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது அவரது கைப்பேசியைக் கைப்பற்றினர். அதில் டைப் செய்யப்பட்டிருந்த பெயரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடி விசாரணையில் இறங்கினர்.
அந்தப் பெண் விட்டுச் சென்ற அந்த ஒற்றைச் சான்றின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அவரது காதலனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். உயிருக்குப் போராடும் அந்தப் பதற்றமான சூழலிலும், கொடூரனுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் மன உறுதியும் துணிச்சலும் நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.
காதலித்த பெண்ணையே கொடூரமாகக் கொன்ற அந்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், தனது கடைசி மூச்சிலும் நீதிக்காகப் போராடிய அந்தப் பெண்ணின் தைரியத்தைப் பாராட்டியும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
