மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக முதியவர் ஒருவர் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அனில் யாதவ் மற்றும் சுனில் யாதவ் என்ற இரு சகோதரர்கள், தங்களது உறவினரான கெந்தா பாய் என்பவரை மாந்திரீகம் செய்வதாகச் சந்தேகப்பட்டு, கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

தங்களது வீட்டில் தொடர்ந்து நிகழ்ந்த மரணங்கள், கால்நடைகளின் இறப்பு மற்றும் கர்ப்பிணி மனைவியின் உடல்நலம் குறித்த அச்சத்தால், அந்த முதியவரே காரணம் என நம்பி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஒரு சகோதரர் மொபைல் போன் மூலம் முதியவரின் நடமாட்டத்தை கண்காணித்துத் தகவலைக் கொடுக்க, மற்றொரு சகோதரர் மறைந்திருந்து தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தொழில்நுட்பச் சான்றுகள் மற்றும் சைபர் செல் உதவியுடன் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.