ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் இருந்தபோது, கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர், தனது தாயார் மற்றும் சகோதரியுடன் இணைந்து அந்த ஹோட்டலை முற்றுகையிட்டார்.

ஹோட்டல் அறைக்குள் வைத்துத் தனது மனைவியையும், அவரது காதலனையும் அவர்கள் நேரில் பார்த்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

கணவர் தரப்பினர் அந்தப் பெண்ணை வெளியே இழுத்து வந்து விசாரணை நடத்தியபோது, அங்கிருந்த மக்களிடையே அவர் அழுது கூச்சலிட்டுப் பெரும் ரகளை செய்தார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில், பலரும் இச்செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகச் காவல் நிலையத்தில் இதுவரை எவ்விதப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.